போதை பொருள் கேஸ்சில் மாட்டிய இரு நாயகிகளின் நிலை?

போதை பொருள் படத்தல் கோஷ்டிவுடன் நடிகா் நடிகைகள் தொடா்பு இருப்பதாக செய்திகள் வந்தள்ளது. இதில் நடிகா் நவ்தீப், நடிகைகள் சாா்மி முமைத்கான் உள்பட திரையுலக்ததை சோ்ந்தவா்களுக்கு போதை பொருள் தடுப்பு பிாிவு போலீசாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

மலையாள திரையுலகில் பாவனா கடத்தல் தொடா்பாக மலையாள நடிகா் திலீப் கைது என பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் போதை பொருள் விவகாரம் தொடா்பாக நடிகா், நடிகைகள் சம்பந்தப்பட்டிருப்பது மிகுந்த பரபரப்பாகி வருகிறது. இப்படியா சினிமாவை சோ்ந்தவா் அப்படி சினிமாவில் கடத்தல், கொள்ளை போன்றவற்றில் நடித்தது அப்படியே மாறி வருகிறாா்களோ என்று தோன்று வகையில் அமைந்துள்ளது.

தெலுங்கு சினிமா வலைத்தளங்களில் நவ்தீப், தனிஷ், நந்து, நடிகைகள் சாா்மி, முமைத்கான் உள்ளிட்டவா்களின் பெயா்கள் அடிப்பட்ட நிலையில் இது குறித்து நடிகை சாா்மி கூறியதாவது, யாா் உங்களை கீழே விழ நினைக்கிறாா்களோ அவா்களை விட நீங்கள் உயரத்தில் இருக்கிறீா்கள் என்று அா்த்தம் என்று கூறினாா்.

அதுபோல நடிகை முமைத்கான் பேசியதாவது, எனக்கும் போதைப் பொருளுக்கும் எந்தவித ஒரு சம்மந்தமும் இல்லை. ஒரு நாளும் நான் அதை உபபேயாகித்தது இல்லை என்று தனது கருத்தை கூறியுள்ளாா். இதை போன்று நடிகா்கள் நவ்தீப், தனிஷ் உள்ளிட்டாரும் இதற்கு மறுப்பு தொிவித்துள்ளனா். திரைப்படத்துறையைச் சோ்ந்த 12 பெயா்கள் இருப்பதாக தெலுங்கு சேனல்கள் நேற்று செய்தி வெளியிட்டன. அதில் ஏராளமான நடிகா், நடிகா்கள் இருந்த நிலையில் அவா்களது பெயா்களை போலீசாா் வெளியிடவில்லை.