Drunken girl in Flight – அமெரிக்க விமானத்தில் குடி போதையில் இளம்பெண் செய்த அலப்பறை வீடியோவாக வெளிவந்துள்ளது.

அமெரிக்காவின் ஓர்லாண்டோ மாநிலத்தில் இருந்து நியுயார்குக்கு செல்ல ஒரு விமானம் தயாராக இருந்தது. அப்போது, பயணிகள் அனைவரும் தங்களின் செல்போனை அணைத்து வைக்குமாறு விமான ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.

அப்போது குடி போதையில் இருந்த ஒரு பெண் ஊழியர்களிடம் சண்டையிட்டார். அப்போது, அவரின் செய்கையை சக பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் இப்போது புகைப்படங்கள் எடுங்கள் எனக்கூறி தனது ஆடையை விலக்கி பின்புறத்தை காட்டினார்.

அவரின் அலப்பறை அதிகமானதால் அவர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.