வெற்றி படங்களின் நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கருப்பன் படத்தை தொடா்ந்து அடுத்து நடிக்கும் படத்தில் டப்மாஷ் மூலம் புகழ் பெற்ற மிருனாளி நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

ஆரண்ய காண்டம் என்ற படத்தின் மூலம் புகழ் பெற்ற தியாகராஜன் குமாராஜா இயக்கி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க உள்ளாராம். இதில் ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநா் மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனா்.

இப்படத்தை தியாகராஜன் குமாராஜாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். அவருடைய தயாரிப்பு நிறுவனமான Tyler Durden And kino Fist மூலம் தயாரித்து வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசரானது அண்மையில் வெளியாகி ரசிகா் பெருமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.