செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 26

என் முதல் பட அனுபவம் .. மனம் திறக்கும் டப்ஸ்மாஸ் மிருநாளினி

10:47 மணி

சமூக வலைத்தளங்களில் டப்ஸ்மாஸ் மூலம் பிரபலமான மிருநாளினி, சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

சினிமாவில் இடம்பெற்ற பல காட்சிகளை தனது வசீகரமான முகபாவணைகள் மூலம் டப்ஸ்மாஸ் செய்து சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர் மிருநாளினி. இவரை சினிமாவில் நடிக்க பலரும் முயன்றனர். அதில், சுரேஷ் குமார் என்பவர் வெற்றி பெற்றார். இவர் நகல் என்ற என்கிற பேய் படத்தை இயக்குகிறார். அதில்தான் மிருநாளினி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்டில் நடிப்பது பற்றி அவர் கூறும் போது “ நகல் படம் என் சினிமா வாழ்வில் முதல் படம் என்பதால் எனக்கு பதட்டமாக இருந்தது. ஆனால், இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் அவரின் படக்குழு அதை எளிதாக்கியது. படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக இருந்தால், எனக்கு நடிப்பதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. இதுபோன்ற ஒரு படக்குழு எனக்கு அமைந்ததற்காக நான் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

(Visited 86 times, 1 visits today)
The following two tabs change content below.
சிவ குமார்

சிவ குமார்

சிவகுமார்(Trainee Subeditor)- இவர் திரைத்துறையை சார்ந்தவர்.கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இணையதள செய்தி பிரிவிற்கு புதியவர். ஆனாலும் அனுபவம் உள்ள ஆசிரியர் போன்று செய்திகள் கொடுப்பது இவரது சிறப்பு. தொடர்புகொள்ள- 9788855544