ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996ஆம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தில், சுகன்யா, மனிஷா கொய்ராலா, கஸ்தூரி, நெடுமுடி வேணு, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இப்படம் வெளியாகி 22 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ‘2.0’ படத்தின் ரிலீசுக்குப் பிறகு இயக்குநர் ஷங்கர் இப்படத்திற்கான பணிகள் தொடங்க இருக்கிறார்.

இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார். மேலும், அக்‌‌ஷய் குமார் இதில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில், ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, ‘ஓ காதல் கண்மணி’, ‘சோலோ’, ‘நடிகையர் திலகம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.