அப்போ மாதவன் இப்போ துல்கர் சல்மான்

மணிரத்தினத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒ காதல் கண்மணி’ மற்றும பாலாஜி மோகனின் ‘வாயை மூடி பேசவும்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்ளுக்கு அறிமுகமாகியவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம், தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த இவர் பாலிவுட்டின் ரசிகர்களையும் ஒரு கை பார்க்கவுள்ளார். ரோனி ஸ்க்ருவாலா என்ற தயாரிப்பு நிறுவனம் எடுக்கவிருக்கும் ஹிந்தி படந்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.  மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மகனான இவர் 2012 ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தில் அறிமுகமானதில் இருந்து இவர் நடிப்புலகம் ஏறுமுகம்தான்.

தெனிந்திய நடிகை நடிகர்கள் பாலிவுட் பக்கம் செல்வது ஒன்னும் புதிசு இல்ல, அலைபாயுதே மாதவன்  அங்கு சக்கைப்போடு போடுவது அனைவருக்கும் தெரியும் அவரை அடுத்து துல்கர் சல்மானும் பாலிவுட் ரசிகர்களைக் கவர்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கனும். துல்கர் சல்மான நடிக்கவிருக்கும் கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் அபிஷேக் பச்சான், ஆனால் கால்ஷீட் சிக்கல் காரணமாக இந்த வாய்ப்பு ‘பெங்களூர் டேஸ்’ ஹீரோவிற்கு வந்துள்ளது.

கிருஷ் 3 படத்தின் திரைக்கதை எழுத்தாளர் அகர்ஷ் குரானாஇந்தப் படத்தில் இயக்குநராகவும், இணையதள பிரபலம் மிதிலா பார்கர் நாயகியாகவும் அறிமுகமாகின்றனர். ‘லஞ்ச பாக்ஸ்’ புகழ் இர்ஃபான் கானும் இதில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. துல்கர் பெங்களூரில் வசிக்கும் இளைஞ்சராக நடிக்கிறார்.

துல்கர் சல்மானின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் சோலோ படமும் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.