தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கின் விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டதில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தினகரன் மீது அதிருப்தியிலும், வருத்தத்திலும் தங்க தமிழ்ச்செல்வன் இருப்பதாக பேசப்படுகிறது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி தங்க தமிழ்ச்செல்வன் உள்பட குறைந்தது 7 பேரையாவது தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு தூண்டில் போட ஆரம்பித்துள்ளதாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  நடிகர் விஷால் டம்ளரில் தண்ணீர் எடுத்து குடிக்கலாம்: அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!

அண்ணா நகரில் உள்ள அமைச்சர் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வனுடன் பேசி வருகிறாராம். அமைச்சர் பதவி உள்ளிட்ட பல டீல் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. தங்க தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காமலேயே பேசி வருகிறாராம். ஆனாலும் விடாமல் துரத்துகிறதாம் எடப்பாடி தரப்பு. மேலும் 6 தகுதிநீக்கம் செய்யப்பட்டஎம்எல்ஏக்களை குறிவைத்து அவர்களின் குடும்பத்தாரிடம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வருகிறது.