தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த வழக்கு தீர்வை எட்டாமல் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை தினகரன் தரப்பு எதிரபார்த்துக் கொண்டிருந்ததுபோல எடப்பாடி தரப்பும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. மூத்த அமைச்சர்களை அழைத்து தீவிர ஆலோசனையும் நடத்தினார் எடப்பாடி. தீர்ப்புக்கு பின்னர் பேசிய எடப்பாடி இனி நாம் கவலைப்பட தேஎவையில்லை என உற்சாகமாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் - இப்படி கலாய்க்கலாமா கஸ்தூரி?

மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு நிச்சயம் தலைமை நீதிபதியின் தீர்ப்பை பின்பற்றித்தான் இருக்கும். எனவே இனி நமக்கு கவலை இல்லை. நமது கவலை எல்லாமே இந்த 18 தொகுதிக்கும் வரப்போகும் இடைத்தேர்தலில் எப்படி ஜெயிக்கப்போறோம் என்பது தான். அதைப்பற்றி மட்டும் தான் சிந்திக்கனும் என உற்சாகமாக அமைச்சர்களிடம் எடப்பாடி பேசியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.