திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து திமுகவில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி களமிறங்க உள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தப்பார்க்கிறார்கள் அதிமுகவினர்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சில அமைச்சர்களிடம் ஆலோசனையே நடத்தியுள்ளாராம். உளவுத்துறை மூலம் அழகிரியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கவனிக்க உத்தரவிட்டுள்ளாராம். கருணாநிதி இருந்தவரை அமைதியாக இருந்த ஸ்டாலின் இனிமேல் அமைதியாக இருக்க வாய்ப்பில்லை. மெரினாவில் நாம் இடம் கொடுக்காததால், ஸ்டாலின் நம் மீது அமைதியான போக்கை இனிமேல் கடைபிடிக்க மாட்டார் எனவே அழகிரி மூலம் நாம் ஸ்டாலினிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என எடப்பாடி அமைச்சர்களிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  அழகிரியை கட்சியில் சேர்க்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் இன்று துவக்கம்

அழகிரிக்கு மதுரை பக்கம் தென் மாவட்டங்களில் செல்வாக்கு இருக்கு, கருணாநிதி பிறந்த திருக்குவளையில் ஸ்டாலினை விட அழகிரிக்குத்தான் செல்வாக்கு அதிகம். அதனால் தன்னோட ஆதரவாளர்களை திரட்ட ஆரம்பித்திருக்கும் அழகிரிக்கு நாம் நேரடியாக உதவாவிட்டாலும், மறைமுகமாக உதவனும் என எடப்பாடி அமைச்சர்களிடம் அறிவுறுத்தியுள்ளாராம்.

இதையும் படிங்க பாஸ்-  ஆளுநரை கோபப்படுத்திய அந்த வார்த்தை: திமுகவினர் சிறையிலடைப்பு!

ஸ்டாலின் எதிர்ப்பாளர்களை ஒன்றுதிரட்டி அவர்கள் அழகிரியை சந்திக்க நாம் வழி செய்ய வேண்டும். அழகிரிக்கு கூட்டம் அதிகமாக அதிகமாக அது ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதே எடப்பாடியின் ஒரே இலக்கு. இதற்கான வேலையை அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளாராம் எடப்பாடி. ஸ்டாலின் நம்மை சீண்டினால் நாம் அழகிரி மூலம் அவரை சீண்டலாம் என எடப்பாடி முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.