தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சாமியாக சித்தரிக்கப்பட்ட எடப்பாடி சாமி பேருக்கு அர்ச்சனை என்று திரையரங்கில் ஒளிப்பரப்பப்பட்ட விளரம்பரத்தை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழக செய்தித்துறை சார்பில் அரசு விளம்பரங்கள் ஒளிபரப்புவது வழக்கமான நடைபெறும் செயல். அப்படி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கும் விதமாக இப்படி விளம்பரங்கள் வெளியாகுவது சகஜம். அரசின் சாதனைகளை ஒளிப்பரப்பதுவது நடைபெறும். இந்நிலையில் சமீபத்தில் திரையரங்கில் முதல்வர் எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் ஒரு விளம்பரம் வெளியானது. அரசு செய்தித்துறை சார்ப்பில் அந்த விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

இதையும் படிங்க பாஸ்-  ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் - இப்படி கலாய்க்கலாமா கஸ்தூரி?

அது என்னவென்றால் ஒரு பெண் கோவிலில் அர்ச்சகரிடம் அர்ச்சனை செய்ய வர, அதற்கு அந்த பெண்ணிடம் அரச்சனை யார் பெயருக்கு என்று கேட்க, அந்த பெண் நம்ம முதல்வா் எடப்பாடி சாமி பெயருக்கு குறிப்பிட்டு கூறுவார். இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தளத்தில் இந்த விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்தும், கேலியும் கிண்டலுமாக தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகிய காரணத்தால் அதுவும் முதல்வர் எடப்பாடியை சாமியாக சித்திரிக்கும் வகையில் அந்த விளம்பரம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  தீர்ப்புக்கு முன்னர் ஆதரவு எம்எல்ஏக்களிடம் உருக்கமாக பேசிய தினகரன்!