தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாரம் ஒருமுறைப் பாலியல் கல்வி தொடர்பான வகுப்புகள் நடத்தப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை கடந்த சில ஆண்டுகளாக பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது. பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், பயோ மெட்ரிக் வருகைப் பதிவு, புதிய சீருடைகள் எனப் பலவும் இதனுள் அடக்கம். இந்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினி கூறியதை அப்படியே செய்வேன் - விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிட்யபோது ‘தனியார் பள்ளிகளை விட பாட திட்டத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். சென்ற வருடத்தை விட இந்த் ஆண்டு  2 லட்சம் மாணவர்கள் அதிகமாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். மேலும் மாணவர்களுக்குப் பாலியல் சார்ந்த கல்வியை வழங்கும் பொருட்டு வாரம் ஒரு முறை அவர்களுக்க்ப் பாலியல் கல்வி வகுப்புகள் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்.’ என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  தமிழக இடைத்தேர்தல் நிலவரம் - திமுக 9 இடங்களில் முன்னிலை

பள்ளிக்கல்வித்துறையின் இந்த முடிவு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.