சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்திற்கு முடிவடைந்துவிடும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுடன் முதன்முதலாக பணிபுரியும் அனிருத், அவருக்காக எட்டு பாடல்கள் கம்போஸ் செய்திருப்பதாகவும், படத்தில் எட்டு பாடல்களையும் கதைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பயன்படுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் முடிவு செய்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் பலர் நடித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ்