பிப்ரவரி மாதம் ஏராளமான புதிய தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது.

ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக, பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சிறிய பட்ஜெட் மற்றும் சிறிய நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.

எனவே, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இதற்காக ஒரு குழுவை அமைத்தார். அதன்படி ஒவ்வொரு வார இறுதியிலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் வெளியாகி வந்தது. ஆனால், நவம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மாரி 2, சீதக்காதி, சிலுக்குவார் பட்டி சிங்கம், அடங்க மறு உள்ளிட்ட படங்கள் வெளியான போது பிரச்சனை எழுந்தது. எனவே, யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படங்களை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என விஷால் கூறிவிட்டார்.

இந்நிலையில், அடுத்த மாதம் பிப்ரவரியில் தேவ், வந்தா ராஜாவாதான் வருவேன், களவானி 2, சர்வம் தாளமயம், திருமணம், வர்மா என மொத்தம் 18 புதிய படங்கள் வெளியாகவுள்ளது.

எனவே, தியேட்டர்களை ஒதுக்குவதில் மீண்டும் பஞ்சாயத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.