Modi Biopic moive – பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை குறித்து உருவான திரைப்படத்துக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடியின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்திருந்தார்.

ஆனால், இப்படத்தை தேர்தலுக்கு முன் வெளியிட்டால் அது பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தது போல் ஆகிவிடும் என பல எதிர்கட்சிகள் புகார் கூறின. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. எனவே, இப்படத்தை நாளை உலகமெங்கும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக இப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. பல்வே எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.