ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா ; தேர்தல் ரத்தாகுமா?

09:29 காலை

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஒட்டுக்கு பணப்பட்டுவாடா செய்வது அதிகரித்து வருவதால் அங்கு தேர்தல் நிறுத்தம் செய்யப்படலாம் என பேசப்பட்டு வருகிறது.

Loading...

ஜெ.வின் மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக அணி இரண்டாக பிரிந்து தொப்பி சின்னத்தில் தினகரனும், இரட்டை மின் கம்பம் சின்னத்தில் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனும், திமுக சார்பில் மருது காணேஷும், பாஜக சார்பில் கங்கை அமரனும் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து வேட்பாளர்களும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த தொகுதியில் தினகரன் அணியினர் ஒட்டுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கொடுத்து வருவதாக செய்திகள் வெளிவருகிறது. சமீபத்தில் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுப்பது வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது போக, தினகரன் அணியினர் பணம் கொடுப்பதை தட்டிக் கேட்ட திமுகவை சேர்ந்த சிலருக்கு கத்திக் குத்தும் விழுந்தது. மேலும், பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இப்படி தொடர்ந்து புகார் வந்து கொண்டிருப்பதால், தேர்தலை நிறுத்திவிட தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 30 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com