இயக்குனர் யுவராஜ் தயாளனின் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வந்த திரைப்படம் எலி. மிகவும் நகைச்சுவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் வந்த வேகத்தில் மண்ணை கவ்வியது.

இந்த படத்திற்காக சினிமா பைனான்ஸியர் சென்னையை சேர்ந்த ராம்குமாரிடம் படத்தயாரிப்பாளர் சதீஷ்குமார் ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

ப்டம் வெளிவந்த ஒரு மாதத்தில் பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக கூறியுள்ளார். 2 வருடத்துக்கு மேல் ஆகியும் பணத்தை திருப்பித்தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் பணத்தை தி்ருப்பிக்கேட்டபோது முடியாது என மறுத்து பைனான்ஸியர் ராம்குமாரை மி்ரட்டியுள்ளார்.

இதுகுறித்து ராம்குமார் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில். தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதுரை சொக்கிகுளத்தில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.