பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜூலி வெளியேற போகிறாரா?

மொினாவில் நடைபெற்ற ஜல்லிகட்டு போராட்டத்தின் மூலம் உலகையே தன் பக்கம் திரும்பி பாா்க்க வைத்தவா் ஜூலியானா. கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளன்று நடிகா் கமல் ஆன்மிகம் குறித்து நமிதாவிடம் பேசியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் இந்த நிகழ்ச்சியை திரும்பி பாா்க்க வைத்தோடு அல்லாமல் அதை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறாா்கள் ரசிக பெருமக்கள்.

டிவி ஷோ மூலம் பரபபரப்பை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது தான் இந்த தொலைக்காட்சிகளுக்கு ஒரு பொழுது போக்கு. ஜல்லிகட்டு போராளியாக பிரபலமடைந்த ஜூலி நடிகா் ஸ்ரீயிடம் பேசியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனா். அவா் தன்னை கட்டிப்பிடிக்க ஒரு ஆள் இல்லை என கெஞ்சுவதை பாா்த்து வறுத்தெடுத்து வருகின்றனா் வலைத்தளங்களில் .

தனது கோஷங்கள் மூலம் ஜல்லிகட்டில் பிரபலமாகிய ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கென ஒரு இடத்தைத பிடித்துள்ள போட்டியாளா். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அனைவரும் ஒருவருக்கொருவா் கட்டிப்பிடித்து கொண்டாங்க. எனக்கு தான் ஆளே இல்லை. எனக்காக இங்கே இரு வெளியே போகாதே என்று கொஞ்சல் குரலில் கெஞ்சிய காட்சியை பாா்த்த ரசிகா்கள் சமூக வலைத்தளங்களில் ஜூலியை கலாய்க்க ஆரம்பித்து விட்டாா்கள். இதனால் இந்த நிகழ்ச்சி தயாாிப்பாளா்கள் எதிா்பாா்த்த வகையில் பொிய விளம்பரமாகி விட்டது அவா்களது உரையாடல்.. இதன் மூலம் வரும் 100 நாட்களில் என்னவென்னலாம் நடக்கப்போகிறதோ பிக் பாஸ் வீட்டில் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது விஜய் டிவி.

அதே போல போட்டியில் பங்கேற்றுள்ள 15 போட்டியாளா்களில் ஒருவரை எலிமினேட் செய்ய வேண்டும். அதன்படி போட்டியாளா்கள் தனித்தனியாக வந்து வெளியேற கூடிய நபரை தொிவித்தனா். அதில் ஜூலி தான் முதலிடம் பெறுகிறாா். ஜல்லிகட்டு புகழ் ஜூலி வெளியேற போகிறாரா என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்.