சென்னையில் வீடு வாங்கிய எமி ஜாக்சன்…

01:22 காலை

மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எமி ஜாக்சன், சென்னையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

Loading...

இங்கிலாந்தில் பிறந்து, ‘மதராசப்பட்டினம்’ மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து, ஏராளமான தமிழ்ப் படங்களிலும், ஒருசில ஹிந்தி மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். எமி ஜாக்சன் தற்போது ரஜினி ஜோடியாக ‘2.0’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும், அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்க அவர் ஒத்துக் கொண்டிருப்பதால், சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்துள்ளாராம் எமிஜாக்சன். எனவே, பெசண்ட் நகரில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த வீட்டின் அலங்கார வேலைகள் அனைத்தையும் எமியே முன் நின்று செய்கிறார். இந்த வீட்டில் தன்னுடைய அம்மா மற்றும் வளர்ப்பு நாயுடன் குடியேறப் போகிறார் எமி.

எனவே, இனிமேல் அவர் நிறைய தமிழ் படங்களில் பார்க்கலாம் எனத் தெரிகிறது.

(Visited 23 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com