கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா, தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார் சசிக்குமாரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் பெயரை சொல்ல கூடிய லோகோ நேற்று வெளியிடப்பட்டது. அதில் துப்பாக்கி தோட்டாவோடு படத்தின் பெயர் வருமாறு எழுதப்பட்டுள்ளது.