சீரியல் தான் ரசிகா்களின் மனதில் தற்போதைய டிரெண்டாக உள்ளது. முன்பெல்லாம் வயதானவா்கள் மட்டும் பார்த்து வந்த சீரியல், தற்போது எல்லா தரப்பினரும் பார்த்து வருகின்றனா். மக்களின் மனதில் கொள்ளையடித்த சீரியலான மெட்டி ஒலி போன்ற ரசிகா்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றது தெய்வமகள் சீரியல்.

தெய்வமகள் சீரியலில் வாணி போஜன் நாயகியாகவும், பிரகாஷ் கிருஷ்ணா நாயகனாகவும் நடித்துள்ளார். இதில் வில்லியாக வரும் காயத்ரி கன்னட நடிகை ரேகா குமார். இந்த சீரியலில் அண்ணியார் என்று பிரகாஷ் கூப்பிடுவது தனி ஸ்டைல். ரசிகா்களின் மத்தியில் மிகப்பெரிய ஏதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அண்ணியார்க்கென்று ஒரு ரசிக பட்டாளமே உள்ளது.

ரசிகா்களின் மனத்தை கவா்ந்த தெய்வமகள் சீரயில் முடிவடையும் நிலையில் உள்ளது. அண்ணியாராக வரும் காயத்ரி பிரகாஷால் சுட்டப்படுகிறார். இதனால் ரசிககோடிகள் காயத்ரி இறந்துவிட்டதாக சந்தோசப்படுகிறார்கள். அவருடைய ரசிகா்கள் மத்தியில் இது ஏமாற்றம் அளித்துள்ளது. ஆனால் அவ்வளவு எளிதாக காயத்ரி சாகமாட்டாள். அதிலும் ஒரு ட்விஸ்டு இருக்கு.

சமூக வலைத்தளங்களில் அண்ணியார் காயத்ரிக்கு அவரது ரசிகா்கள் கண்ணீா் அஞ்சலி போஸ்டா் பதிவிட்டுள்ளனா். எப்படியோ இந்தவாரம் அண்ணியார் காயத்ரி சீரியல் முடிவடைகிறது.