பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்யா நடத்தி வந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ஷோவின் இறுதி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில்
சுசானா, சீதாலக்ஷ்மி, அகதா ஆகிய மூன்று இளம்பெண்கள் தேர்வாகியிருந்தனர்.

இதனால் நேற்றைய இறுதி போட்டியில் ஆர்யா, இவர்களில் ஒருவரை தனது வருங்கால மனைவியாக ஏற்று கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பார்வையாளர்கள் ஏமாற்றம் தரும் வகையில் தனது முடிவை அறிவித்தார். அவர் எடுத்த முடிவு இதுதான்:

என்னோட வாழ்க்கையை முடிவு செய்றதா அறிவிக்கப்பட்ட இந்த ஷோவுல, இவ்ளோ எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆனதுல இருந்து என்னால டிசைட் பண்ண முடியலை. எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது. அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க. என்னோட மனம் விட்டுப் பேசினாங்க. நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே சொல்லிடுறேன்!”

இவ்வாறு ஆர்யா கூறினார்