Ladies Hostel – வயிற்றுப் பிழைப்புக்காக பெண்களின் விடுதியில் நுழைந்து லேப்டாப் மற்றும் பெண்களின் உள்ளாடைகளை திருடி விற்று வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்து ஜோகேஸ்வரியில் உள்ள ஒரு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் ஃபைசல் அகமது சித்தே. இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். இவருக்கு போதை மருந்து பழக்கம் இருந்ததாக தெரிகிறது. எனவே, சில மாதங்களுக்கு முன்பு அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, போதை மருத்து அருந்துவதற்காக அவர் திருடும் வேலையை தொடங்கியுள்ளார்.

பல்வேறு இடங்களில் மடிக்கணினி உள்ளிட்ட சில பொருட்களை அவர் திருடி விற்று வந்ததாக கூறப்படுகிறது. கோரேகான் பகுதியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் நுழைந்த அவர் ஒரு அறையில் இருந்த மடிக்கணினியை திருடியுள்ளார். எனவே, சிசிடிவி கேமரா மூலம் சோதனை செய்ததில் ஃபைசல் சிக்கினார். அப்போது, பெண்கள் அணியும் உள்ளாடைகளையும் அவர் திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது, மடிக்கணினியை வாங்கிய நபரை கண்டுபிடித்தனர். அவர் மூலமாக ஃபைசலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.