தனது தங்கை வேறு மதத்தை சார்ந்த ஆண் ஒருவரைக் காதலிப்பதால் கோபமடைந்த இளைஞன் தன் குடும்பத்தையே பெட்ரோல் குண்டு வீசி படுகொலை செய்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் யார்க்‌ஷயர் மாகாணத்தில் ஹடர்ஸ்ஃபீல்டு எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஷாகித் முகமத் என்ற இளைஞன் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவரின் தங்கை ஒருவர் வேறுமதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை காதலித்ததால் இவர் கோபம் அடைந்துள்ளார். ஆனால் இதை அவரது குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதனால் கடும் கோபமடைந்த முகமத் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது பெட்ரோல் குண்டுகளை வீட்டிற்குள் வீசி கொளுத்தியுள்ளார். இந்த பெட்ரோல் குண்டால் அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் வயதான பாட்டி ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து இவர் மீதான வழக்கை விசாரிக்க பாகிஸ்தான் அரசு தாமதப்படுத்த ஒருவழியாக தீர்ப்பு வந்துள்ளது. இவருக்கு 23 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.