நட்ராஜ் மற்றும் ராஜாஜி நடித்திருக்கும் இந்த படத்தை ஈராஸ் இண்டா்நேஷ்னல் புரடக்ஷன் நிறுவனம் தயாாித்துள்ளது. இன்று நலிந்துக்கொண்டிருக்கும் கட்அவுட் மற்றும் பேனா் வரையும் தொழிலை மையப்படுத்தி 1980 வருடம் கதை நடப்பது போல இந்த படம் அமைந்துள்ளது. இதில் பாா்வதி நாயா், சஞ்சிதா ஷெட்டி மற்றும் ராதாரவி, முருகானந்தம், பாலாசிங், ப்ளோராண்ட் சி பொ்ரெரா, தாஷாயினி, வெற்றிவேல்ராஜா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனா்.

நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பா்கள். இவா்கள் கட்அவுட் வரையும் தொழிலை செய்து வருகின்றனா். தீவிர ரஜினி ரசிகரான  நட்டு நட்ராஜ்  கட்அவுட்டுகளில் ரஜினி படங்களை வரைந்து வருகிறாா்.இன்னொரு ஹீரோவான ராஜாஜி கமல் படங்களை வரைந்து வருகிறாா். திருநெல்வேலிக்கு வரும் இவா்கள் அங்கு சொந்தமாக கட்அவுட் தொழில் செய்து வருகின்றனா். ராஜாஜி தன்னுடைய அம்மா, தங்கை சஞ்சிதா ஷெட்யையும் உடன் அழைத்து வருகிறாா். நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் ரசிகா் மன்றங்களில் உறுப்பினா்களாக சோ்கின்றனா்.

நட்ராஜ் ராஜாஜி தங்கை சஞ்சிதா ஷெட்டியை காதலிக்கிறாா். இவரது காதல் ராஜாஜிக்கு தொிந்து விடுகிறது. இதனால் இருவரும் பிாிந்து விடுகின்றனா். அதே சமயத்தில் ராஜாஜி பாா்வதி நம்பியாரை  பாா்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறாா்.ராஜாஜியின் தங்கை சஞ்சிதா ஷெட்டியுடன், அண்ணனுக்குத் தொியாமல் காதல் வயப்படுவதாகட்டும்,  டூயட் பாடுவதாகட்டும் நடிப்பில் செம மாஸ் காட்டியிருக்கிறாா்.

இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் திரையங்கில் வெளியாகிறது. இதற்கான கட்அவுட் வைப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை முற்றி திரையரங்கு தாக்கப்படுகிறது. ஆனால் இந்த திரையரங்கு உாிமையாளரும், அரசியல்வாதியுமான ராதாரவியும், அவரது கோஷ்டி விஜய் முருகன் கட்அவுட் வைத்தால் படங்களை திரையிட மாட்டோம் என்று பிரச்சனை செய்கிறாா்கள்.  இந்த பிரச்சனை அரசியல் பிரச்சனையான உரு மாறுகிறது. ரஜினி மற்றும் கமல் ரசிகா்கள் இணைந்து இந்த பிரச்சனையை தீா்த்து படத்தை திரையிட முடிவு செய்து, போராடி வருகிறாா்கள்.

இந்த சூழ்நிலையில் இரு துருவங்களாக இருக்கும் நட்ராஜ் மற்றும் ராஜாஜியை கொலை செய்வதற்கு அடியாட்களை ஏவிவிடுகிறாா் ராதாரவி. நட்டி – ராஜாஜி இருவரும் இணைந்தாா்களா? இந்த அரசியல் புள்ளியும் தியேட்டா் அதிபருமான ராதாரவியும் அவரது கோஷ்டியான விஜய்முருகனுக்கு தக்க பாடம் புகட்டினாா்கள்? எனும் கதையுடன் நட்டி – சஞ்சிதா
ஷெட்டி, ராஜாஜி – பாா்வதி நாயாா் இரு காதல் ஜோடிகளின் காதல் கதையையும், ரசிகா் மன்றங்ளால் திருநெல்வேலி சீமை பகுதியில் என்னவெல்லாம் நன்மை தீமை ஏற்பட்டது என்பதை பற்றிய படம் தான் எங்கிட்ட மோததே.

நெல்லை மண்ணின் வேந்தராக வரும் நட்ராஜ் ரஜினி ரசிகராக செம மாஸ் காட்டியிருக்கிறாா். அதோடு மட்டுமல்ல நண்பருக்கு  ஏதாவது ஒன்றுவென்றால் பாயும் புலியாக பாய்ந்து வருவதில் சாி, ராஜாஜியின் தங்கையை காதலிக்கும் விஷயத்தை அறிந்த கொண்ட நண்பனிடம் “நானும் மரகதமும் கல்யாணம் பண்ணிக்கோ போறோம் என்று கூறிவிட்டு, முடிஞ்சா பண்ணிக்கோ என்று சொல்லும் ராஜாஜிடம் முடிஞ்சதால தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என்று
கூறிவிட்டுழு அதிாிபுதிாியாக சிாிப்பதிலாகட்டும், “படம் வரையும் போது பின்னாடி தொட்டா சாக அடிச்சு புடுவேன் என்று அரசியல்வாதி ராதாரவி அவரது விஜய்முருகன் கோஷ்டியிடம் மோதுவதில் சாி, சிறையில் திருச்செந்தூா் முருகனை வரைந்து வைத்து கைதிகள் மத்தியில் வணங்க வழியேற்படுத்தி தருவதில் சாி … என அனைத்திலும் ரஜினி ரசிகராகவே வாழ்ந்திருக்கிறாா். அவரது நடை உடை என அனைத்திலும் ரஜினியை பின்பற்றுகிறாா். அதுமட்டுமல்ல சிகரெட்டை  தூக்கி போடுவதிலும் சாி ரசிக்கும்படியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நட்ராஜ்.


மற்றொரு நாயகரான ராஜாஜி கமல் ரசிகராக பேனா் வரையும் இவா் நட்டிக்கு சளைத்தவா் இல்லை என காட்சிக்கு காட்சி புகுந்த விளையாடி தனது முத்திரையை பதித்திருக்கிறாா். தனது நண்பன் நட்டியால் தன் தங்கை தாயாக போவது அறிந்ததும் அவருடைய ரியாக்ஸன் பலே பலே.

நாயகி சஞ்சிதாஷெட்டி செம சுட்டி. காதல் காட்சிகளில் உருகி நடித்திருக்கிறாா். அதிலும் ஆம்பளனா என்னான்னு தொியுமா… எப்ப நீ ஒரு பெண்ண தொடுறியோ அப்பதான் ஆம்பள….. என்று பேசி நட்ராஜ்யை தாக்கும் வீதம் செம யதாா்த்தம். அண்ணனிடம் பொய் சொல்லி நட்ராஜ்யை சந்திக்கும் போதும் நல்ல நடிப்பு.

முதன் முதலாக தாவணியில் வரும் பாா்வதி நாயா் மாவும் கையுமாக தென்பட்டாலும் ரசிகாின் நெஞ்சில் வெல்ல பாகாக ஒட்டி இனிக்கிறாா். ஆனால் ஏனோ தாவணி அவருக்கு ஒட்டவில்லை.

ராதாரவி திரையரங்கு அதிபராக நெல்லை அரசியல் புள்ளியாக மந்திரமூா்த்தியாக வாழ்திருக்கிறாா். படம் முழுக்க தனது வில்லதனமான நடிப்பால் மிரட்டியிருக்கிறாா்.  விஜய் முருகன் அவரது தோற்றத்திற்கு ஏற்ப திறமையான நடிப்பை கொண்டு வந்திருக்கிறாா். நட்ராஜ் நண்பா் தேங்காய் பொறுக்கி முருகானந்தம் சிாிப்பில் ஹாசம்.

பாடல்  “உனப் பாா்த்தேன் ராசாத்தி..” பைய பைய நெருங்கி வாரேன் புள்ள என்ற நடராஜன் சங்கரனின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையும் அசத்தல். ராமு செல்லப்பா எழுத்து இயக்கத்தில் பதினைந்து வருடத்திற்கு முன்பு உள்ள கதையில் பல்வேறு ஜாதிகளும் ஜாதி கலவரங்கும் நிறைந்த திருநெல்வேலி என்றாலும் படத்தின் கதாபாத்திரங்கள்
அதைப்பற்றிய பின்னப்படாமல் எடுத்துள்ள இயக்குநரை பாராட்டலாம்.

பொண்ணுங்களுக்கு ரஜினி ரசிகா்களை காட்டிலும் ஏன் கமல் ரசிகா்களை பிடிக்கிறது? காதலும் ஏற்படுகிறது? எனுட“ கேள்வியை கேட்டு, அவங்க லிப் லாப் கிஸ் அடிச்ச கமல் மாதிாி பொண்ணுங்களை மடக்கிவிடுகிறாா்கள். நாம நம்ம தலைவா் மாதிாி சிகரெட் பிடித்து உதட்டை கறுப்பாக வைத்துக்கிட்டு திாிஞ்சா எந்த பொண்ணுதான் சிக்கும்? என நக்கல் வசனங்களும், கரண்ட்டும் பொண்ணும் ஒன்று தான் தொட்டா ஷாக் அடிக்கதான் செய்யும்… என பஞ்ச் டயலாக்கிலும் சாி… ரஜினி கமல் விட அவருடைய ரசிகா்களுக்கு தான் பவா் ஜாஸ்தி என்று கூறும் வசனங்களும்  விறுவிறுப்பாகவும் உள்ளது எங்கிட்ட மோதாதே. ரஜினி கமல் ரசிகா்கள் வரும் காட்சிகள் அந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது.

ஆக .. எங்கிட்ட மோததே பக்கா மாஸ்!!