EPS Deal with Sasikala – அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள சிறையில் உள்ள சசிகலாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டீல் பேசி வருவது தெரியவந்துள்ளது.

40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக படு தோல்வி அடையும் என உளவுத்துறை அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை கொடுத்துள்ளத கூறப்படுகிறது. மேலும், தேவைப்பட்டால் திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம் என தங்க தமிழ்ச்செல்வனும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, எப்படியாவது கட்சியை காப்பாற்றிக் கொள்ளும் பணியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சி நடந்தது. அதாவது, 18 தொகுதி இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனால் அதிமுக அரசு தனது ஆட்சியை இழக்க நேரிடும். எனவே, எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறைத்து அதன் மூலம் ஆட்சியை எப்படியாவது தக்க வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிடுவதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம் அதற்கு இடைக்காலத்தடை விதித்து விட்டது.

எனவே, வேறு வழியில்லாமல் சிறையில் உள்ள சசிகலாவுடம் தூது அனுப்பும் வேலை நடந்ததாக கூறப்படுகிறது. ஜெ.வின் உதவியாளராக இருந்து சசிகலாவின் நம்பிக்கை உரியவராக இருந்த பூங்குன்றன் மூலம் சசிகலாவிடம் டீல் பேசப்பட்டதாம். அதாவது, தினகரனை ஒதுக்கி விடுங்கள். நாங்கள் ஓ.பி.எஸை விலக்கி விடுகிறோம். அமமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும். நீங்களே பொதுச்செயலாளரக தொடருங்கள். ஆட்சி எங்களுக்கு. கட்சி உங்களுக்கு.. நீங்கள் யாரை வேண்டுமானால் முதல்வர் ஆக்குங்கள். இதற்கு பாஜகவின் ஆதரவும் நமக்கு இருக்கிறது. என்கிற ரீதீயில் சசிகலாவிடம் பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது.

அதற்கு பதில் கூறிய சசிகலா.. அக்காவின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். நல்லது நடக்கட்டும். பார்ப்போம். என் ஆதரவு எப்போதும் இரட்டை இலைக்கே” எனக்கூறி அனுப்பினாராம். அதேபோல், சசிகலா கூறினால், அதிமுகவுக்கு தினகரன் ஆதரவு கொடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தினகரனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை என அதிமுக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருவதாக தெரிகிறது. இது ஓ.பி.எஸ்-க்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருப்பதாகவும், இதுபற்றி பாஜக தலைமையிடம் அவர் புலம்பி வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.