EPS Convincing Sasikala – கட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக அதிமுக தலைமை சிறையில் உள்ள சசிகலாவிடம் தூது விட்டதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் இன்னும் 4 தொகுதிகளில் இடைத்தேதல் நடைபெறவுள்ளது.

40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக படு தோல்வி அடையும் என உளவுத்துறை அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை கொடுத்துள்ளத கூறப்படுகிறது. மேலும், தேவைப்பட்டால் திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம் என தங்க தமிழ்ச்செல்வனும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, எப்படியாவது கட்சியை காப்பாற்றிக் கொள்ளும் பணியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சி நடந்தது. அதாவது, 18 தொகுதி இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனால் அதிமுக அரசு தனது ஆட்சியை இழக்க நேரிடும். எனவே, எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறைத்து அதன் மூலம் ஆட்சியை எப்படியாவது தக்க வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிடுவதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம் அதற்கு இடைக்காலத்தடை விதித்து விட்டது.

எனவே, வேறு வழியில்லாமல் சிறையில் உள்ள சசிகலாவுடம் தூது அனுப்பும் வேலை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, அமமுக ஆதரவு எங்களுக்கு வேண்டும். நீங்களே பொதுச்செயலாளரக தொடருங்கள். ஆட்சி எங்களுக்கு. கட்சி உங்களுக்கு.. இல்லையேல் திமுக உள்ளே நுழைந்து விடும் என்கிற ரீதீயில் சசிகலாவிடம் பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அப்படி தூது போன தூதுவரிடம் கடுமையான கோபத்தை சசிகலா காட்டியதாக தெரிகிறது.

இதுபோக, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்தால், இதுதான் நேரம் என காத்திருக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கி விடுவார். எனவே, என்ன செய்வது , எப்படி ஆட்சியை தக்க வைப்பது என்கிற ஆலோசனையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.