செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 26

எல்லா இயக்குனர்களும் ஆபாச படங்களை இயக்க வேண்டும். வேலுபிரபாகரன்

01:26 மணி

பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன், நடிகை ஷெர்லியை இன்று காலை திருமணம் செய்து கொண்டார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் இந்த திருமணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இன்றைய இந்தியாவில் செக்ஸ் குறித்து மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து பேட்டியளித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் எண்பது சதவிகித குற்றங்கள் செக்ஸ் குற்றங்கள் தான். இங்கு அனைவர் கையிலும் ஆபாச படங்களும் வீடியோக்களும் உள்ளது. இதனால் இயக்குனர்களும் செக்ஸ் படங்களையும் ஆபாச படங்களையும் இயக்குவதில் தவறில்லை. அனைத்து இயக்குனர்களும் ஆபாச படங்களையும் அவ்வப்போது இயக்க வேண்டும்

நான் ஒரு படம் எடுத்தால் அதை மீடியாக்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் சன்னிலியோன் செக்ஸ் படத்தில் நடித்தால் மட்டும் கொண்டாடுகின்றனர். சன்னிலியோனுக்கு கொடுக்கும் மரியாதை எனக்கு கிடையாதா? இன்றைய இளைஞர்கள் 15 வயதிலேயே செக்ஸை அனுபவித்துவிடுகின்றனர். ஆனால் எனது காலத்தில் ஒரு பெண்ணின் மார்பை முழுதாக பார்க்கவே 28 வயது வரை காத்திருக்க வேண்டும்’ என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்,.

(Visited 76 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393