தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் மீண்டும் பாஜகவுக்கு சென்றுவிட்டால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடந்த மாதம் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருநாவுக்கரசரை பிடி பிடி என பிடித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  அதிமுகவுடன் கூட்டணி - பாமகவிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகி

திருநாவுக்கரசர் அவர்கள் பாஜகவிலிருந்து வெளியே வந்தது தவறு. மீண்டும் அவர் வாஜ்பாய் இருந்த பாஜகவுக்கே செல்ல வேண்டும். ஒரு நல்ல தலைவர் நல்ல கட்சியைவிட்டு ஏன் வந்தார் என்று புரியவில்லை. இப்போதுகூட அதிக காலதாமதமாகவில்லை. மீண்டும் அவர் பாஜகவுக்கே செல்வார் என்றால் கண்டிப்பாக காங்கிரஸுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.