பள்ளி ஆசிரியை ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒரு கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த ராமஷிவ் யாதவ் என்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக இருந்தவர். 2017ம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அதை வீடியோவும் எடுத்துள்ளார்.

அதன்பின், அந்த வீடியோவை காட்டி மிரட்டி தனது இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார். அவரின் தொல்லை அதிகமானதால் இதுபற்றி போலீசாரிடம் சமீபத்தில் அப்பெண் புகார் அளித்தார்.

எனவே, ராமஷிவ் யாதவை கைது செய்த போலீசார், அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். அப்பெண் புகார் அழித்ததும் யாதவ் அந்த வீடியோக்களை அழித்துவிட்டார். எனவே, அவரது செல்போனை தடவியல் துறைக்கு அனுப்பி தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.