Ex lover beg for mercy – சீனாவில் ஒரு தம்பதி திருமணம் செய்து கொள்ளும் வேளையில் மணமகனின் முன்னாள் காதலி மேடையேறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட சம்பம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

சீனாவில் நடந்த இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 30 நொடிகள் மட்டும் இந்த வீடியோவில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் மேடையில் நிற்கின்றனர். அப்போது, அந்த மணமகனின் முன்னாள் காதலி மணப்பெண் போல் அலங்காரம் செய்து மேடையேறி, ‘என் தவறுதான் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்’ என மணமகனிடம் கெஞ்சுகிறார்.

திடீரென காலில் விழுந்தும் கெஞ்சுகிறார். இதைக்கண்டு மணமகன் அதிர்ச்சியடைந்து, மணமகளை சமாதானம் செய்ய முயல, அவரின் கையை உதறிவிட்டு மணமகள் கோபத்துடன் அங்கிருந்து செல்கிறார். அவரை சமாதானப்படுத்துவதற்காக மணமகன் அவர் பின்னாலேயே ஓட, முன்னாள் காதலி மேடையில் அமர்ந்து தனியாக அழுகிறார்.
இந்த வீடியோ சீன ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதேபோல், பல ஆங்கில பத்திரிக்கைகளும் இந்த சம்பவத்தை வீடியோவுடன் செய்தியாக வெளியிட்டுள்ளன.