ஓடும் ரயிலில் நள்ளிரவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் காட்பாடி ரயில்வே போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

சபரி விரைவு ரயிலில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்துகொண்டிருந்தார். அந்த ரயிலில் திருவண்ணாமலையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சதாசிவம் என்பவரும் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் ரயில் காட்பாடி அருகே நளிரவு 2 மணியளவில் வந்துகொண்டிருந்தபோது தூங்கிக்கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் முன்னாள் ராணுவ வீரர் சதாசிவம் மீது காட்பாடி ரயில்வே போலீசாரிடம் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதே போன்ற ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் காட்பாடி ரயில் நிலையம் அருகே நடந்தது குறிப்பிடத்தக்கது.