அந்தமானை சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர் சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கும் புனேவை சேர்ந்த 38 வயதான சசிகாந்த் என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலம் காதல் மலர்ந்துள்ளது.

இதனையடுத்து சசிகாந்த் அந்த பெண்ணை நேரில் சந்தித்து தனது காதலை பலப்படுத்தியுள்ளார். இதனையடுத்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார் சசிகாந்த். இதனையடுத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

பின்னர் தான் தனியாக தொழில் தொடங்க உள்ளேன் என அந்த பெண்ணிடம் கூறி 10 லட்சம் ரூபாய் பெற்ற சசிகாந்த் அதன் பின்னர் அந்த பெண்ணை தொடர்புகொள்ளவில்லை. இதனையடுத்து அந்த பெண் புனேவுக்கு சென்று சசிகாந்த் குறித்து விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் தான் அந்த பெண்ணுக்கு சசிகாந்த் தன்னை ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து சசிகாந்த் மீது நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.