நேற்று மாலை முதல் திடீரென பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்கள் சரியாக வேலை செய்யாததால் பயனர்கள் கடுப்பாகியுள்ளனர்.

நேற்று திடீரென பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் டவுன்லோடு மற்றும் குறுஞ்செய்தி அனுப்புதல் போன்ற சேவைகள் செயலற்றுப் போயின. இந்த பிரச்சனை உலகம் முழுவது உருவானதால் இது ஹேக்கர்களின் வேலையாக இருக்கலாம் என சந்தேகம் எழவே பயனர்கள் இதுபற்றி புகார் கூற ஆரம்பித்தனர்.

இதையடுத்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இந்த தொழில்நுட்பக் கோளாறை அந்தந்த சமூக வலைதளங்களின் தொழில்நுட்பக் குழு போராடி சரி செய்தது. ஆனாலும் கிட்டத்தட்ட 12 மணிநேரம் இந்தப் பிரச்சனை தொடர்ந்தது. இந்த முடக்கத்துக்கு காரணம் என்ன என இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.