ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஃபகத் ஃபாசில்..!

ரஜிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தினைச் சன் பிக்சர்ஸ் சர்பில் கலா நிதி மாறன் தயாரித்து வருகிறார். அதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் தற்போது அந்தப் படத்தில் புதிதாக ஒரு ஃபகத் ஃபாசிலும் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

5

படப்பிடிப்பு

டார்ஜிலிங்கில் நடைபெற்று வந்த இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு அன்மையில் முடிவடைந்த நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்புச் சென்னையில் நடைபெற்று வருகிறது.

4

மதுரை

ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கவிருக்கிறது என்றும் சினி ரிப்போர்டர்ஸ்க்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

3

நடிகர்கள்

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ், தீபக் பரமேஷ் மற்றும் முனிஷ் காந்த் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்து வரும் நிலையில் ஃபகத் ஃபாசிலும் நடிக்க உள்ளார்.

2

ஃபகத் ஃபாசில்

மலையாள நடிகரான ஃபகத் ஃபாசில் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1

இசை

ரஜினிகாந்தின் சொந்தக்காரரான அனிருத் ரவிசந்தர் இந்தத் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்பது கூடுதல் தகவல்.