மன்னிப்புக்கு பதிலாக மண்ணை தின்னுங்கள். கன்னடர்களுக்கு எதிராக விஜய் ஆவேசமா?

நடிகர் சத்யராஜை மன்னிப்பு கேட்க செய்ய கடந்த சில நாட்களாக கன்னட அமைப்புகள் போராடி வருகின்றன. இல்லையேல் பாகுபலி 2′ படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என எச்சரித்து வரும் நிலையில் படத்தின் வியாபாரம் கருதி இன்று சத்யராஜ் வருத்தம் தெரிவித்து அறிக்கை விட்டார். இத்துடன் இந்த பிரச்சனை அனேகமாக முடிந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் திடீரென விஜய் இதுகுறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்து கூறியதாக ஒரு செய்தி டுவிட்டரில் உலாவி வருகிறது.

அதில், ‘கன்னடர்களை எச்சரிக்கிறேன். சத்யராஜ் எனக்கு தந்தை போன்றவர். மன்னிப்புக்கு பதிலாக மண்ணை அள்ளி திண்ணுங்கள் என்று கூறியதாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் உண்மையில் இது விஜய் கூறியதே அல்ல. ஆர்வக்கோளாறில் விஜய் ரசிகரோ, அல்லது மாட்டிவிட வேண்டும் என்பதற்காக அஜித் ரசிகரோ செய்த வேலை இது என்று தெரியவந்துள்ளது.

இந்த உண்மை தெரியாமல் விஜய்தான் இவ்வாறு கூறியதாக கன்னட ஊடகங்கள் கொளுத்தி போட்டு வருவதால் இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என தெரிகிறது. உண்மையில் இந்த பிரச்சனையில் எந்தவித தலையீடும் இல்லாமல் விஜய் தற்போது ‘தளபதி 61’ படத்தில் நடித்து வருகிறார் என்பதுதான் உண்மை.