தற்போது நடிகா், நடிகைளின் வாரிசுகள் சினிமாவில் களம் இறங்க தொடங்கி விட்டார்கள். திரையுலகில் வாரிசுகள் அறிமுகமாவது வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். இந்நிலையில் எண்பதுகளில் அக்கா, தங்கை இருவரும் முன்னணி நடிகையாக வலம் வந்தவா்கள் அம்பிகா, ராதா. இதில் ராதாவின் மகள்கள் இருவரும் திரையுலகில் எப்பொழுதே நுழைந்து விட்டார்கள். ஆனால் தற்போது தான் நடிகை அம்பிகாவின் வாரிசுகள் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்கள்

நடிகை அம்பிகாவின் மகனும், நடிகா் லிவிங்ஸ்டன் மகளும் ஒரே படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக உள்ளார்கள். இரு வாரிசுகளும் அறிமுகமாகும் முதல் படம் கலசல். இயக்குநா் சுந்தர் சியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி அஸ்வின் மகாதேவன் தான் இந்த படத்தை இயக்கும் அவா் அறிமுக இயக்குநராக ஆவதும் இந்த படத்தில் தான்.

ஏற்கனவே நடிகா் கார்த்திக் மகனும்,ராதாவின் மகளும் பாரதிராஜாவின் படத்தில் தான் முதன்முதலில் அறிமுகமானார்கள். அதே போல நடிகை அம்பிகா மகன் கேசவ் நாயகனாகவும், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா நாயகியாக ஒரே படத்தில் அறிமுகமாகிறார்கள். இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு பழனியில் ஆரம்பித்து,கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நடைபெறுகிறது.

படத்தின் கதைக்களம் என்னவென்றால் நாம் வேண்டாம் என்று காணிக்கை செலுத்துகிற விஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் எப்படி அப்பாவி மக்கள் மீது திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பது தான் கதை என்றார் இயக்குநா்.