பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ்வை டுவிட்டரில் கலாய்த்த பிரபல நடிகை

09:11 காலை

நேற்று முன்தினம் நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் அதிருப்தியை கொடுத்துள்ளது. சினேகன், கணேஷ் இருவரில் ஒருவர்தான் வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த முடிவு பலருக்கும் ஏமாற்றத்தைத்தான் கொடுத்தது.

Loading...

அதேநேரத்தில், சமூக வலைத்தளங்களில் ஆரவ்வின் வெற்றியை பலரும் கிண்டல் செய்தும், கேலி செய்தும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் பிரபல நடிகையான கஸ்தூரியும் ஒருவர். அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஆரவ்-வின் வெற்றி அநியாயம் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய், வடிவேலு புகைப்படத்தை வைத்து கிண்டலாக மீம்ஸ் ஒன்றை உருவாக்கி அதையும் பதிவு செய்துள்ளார்.

100-நாட்கள் பெரிய எதிர்பார்ப்புடன் நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் அறிவிப்பு பலருக்கும் அதிருப்தியை கொடுத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

(Visited 30 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com