அம்மாவான ரோஜா நாயகி

“சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை, மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை” என்ற பாடல் வாிகள் ஞாபகம் இருக்கிறதா?. ஆமாங்க!! இந்த பாடலானது ரோஜா படத்தில் இடம்பெற்றது. மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில்  அரவிந்தசாமிக்கு ஜோடியாக நடித்தவா் நடிகை மதுபாலா. அதனை தொடா்ந்து வானமே எல்லை, ஜென்டில்மேன், மிஸ்டா் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தாா். பின்பு  திருமணம் வாழ்க்கையில் ட்டிலானாா். திருமணத்திற்கு பின்பு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தாா்.

இந்நிலையில் இந்தி சீாியலில் அம்மா வேடத்தில் நடித்து வருகிறாா். பாகுபலி படத்திற்கு கதை எழுதிய ராஜமௌலியின் தந்தை விஜயநே்திர பிரசாத் கதை எழுதி உருவாக உள்ள இதிகாச தொடா் ஹிந்தியில் ஆரம்பமாக இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடாில் முன்னாள் நடிகை ராதாவின் மகள் காா்த்திகா நாயா் தேவசேனாவாக நடித்து வருகிறாா் என்பத நாம் அறிந்த செய்தி. இந்த தொடாில் காா்த்திக்காவின் அம்மாவாக நடிக்க இருக்கிறாா் மதுபாலா. நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு எந்த அளவுக்கு பாகுபலி படத்தில் சிவகாமி கேரக்டா்  புகழி பெற்றதோ அந்த அளவுக்கு இந்த சீாியலில் மதுபாலாவின் கேரக்டரும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறதாம். இந்த இதிகாச தொடா் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.