அரையிறுதிப் போட்டியில் தோனியின் ரன் அவுட்டைப் பார்த்த ஸ்ரீகாந்த் எனும் ரசிகர் மரணமடைந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பைத் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கடந்த 11, 12 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் எதிர்பாராத விதமாகத் தோல்வி அடைந்தது. இது இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்த பின்னர் இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக தோனி விளையாடிக்கொண்டிருந்தார்.

அவர் 49 ஓவரில் ரன் அவுட் ஆக இந்தியாவின் வெற்றி கைநழுவியது. நூலிழையில் தோனி ரன் அவுட் ஆனது பலருக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இதை தனது மொபைலில் பார்த்துக்கொண்டிருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் எனும் ரசிகர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.