ரஜினியின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 2.0 படம் ரசிகர்களின் பலத்த ஆதரவை பெற்றுள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.O படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. புக் மை சோ இணையத்தில் மட்டும் 10 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரூ.450 கோடி செலவில் 3 வருடங்களாக உருவாண்ட படம் 2.O. இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பத்தில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி உள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி ஒளிபரப்பப்பட்டது. இப்படத்தை பார்த்த பலரும் சமூக டிவிட்டரில் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

படம் செம.. இப்படி ஒரு படத்தை இதுவரை பார்த்ததில்லை.. கிராபிக்ஸ் அபாரம்.. விஸ்வல் ட்ரீட்… ஹாலிவுட் படம் பார்த்தது போல் இருக்கிறது. கலக்கல் தலைவா… சிறந்த கிளைமாக்ஸ் காட்சி.. என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படத்தை பார்த்த பலரும், இப்படி ஒரு தமிழ் படம் இதுவரை பார்த்ததில்லை. இனிமேல் பாக்கப்போவதும் இல்லை.. இப்படி ஒரு கதையை எப்படி ஷங்கர் யோசித்தார் என்றே தெரியவில்லை என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். வரலாற்றில் ஒரு புள்ளியை ஷங்கர் இட்டுள்ளார் என பாராட்டி வருகின்றனர்.