நடிகர் விஜய்சேதுபதி பொது மேடையாக இருந்தாலும், பேட்டியாக இருந்தாலும் அவர் தெரிவிக்கும் கருத்து ஒவ்வொன்றிலும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். மேலும் புதுமையாகவும் இருக்கும்

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மீது அன்பு செலுத்தும் ரசிகர்கள் தான் எனக்கு சாமி என்றும், அத்தனை சாமிகளுக்கும் நான் ஒருவனே பக்தன் என்றும் தெரிவித்துள்ளார்.

அன்பு செலுத்துபவர்கள் எல்லாம் சாமி என்றால் என்மீது அன்பு செலுத்தும் ரசிகர்களை சாமி என்று கூறுவதில் என்ன தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

விஜய்சேதுபதியின் இந்த பேட்டி அவரது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.