அஜித்திற்கு கோவில் கட்டி வரும் ரசிகா்கள்

திரைத்துறையிருக்கு என்று தனியாக ஒரு ரசிக பட்டாளமே இருக்கும். அதிலும் தீவிரமான ரசிகா்கள் தங்களது அன்பை பல வழிகளில் செயல் படுத்தி வருவது வாடிக்கை. சினிமாவில் நடிகா், நடிகைகளுக்கு ரசிகா் கொடுக்கும் பாிசு மிகவும் தீவிரமாக தான் இருக்கும். அந்த வகையில் குஷ்புக்கு கோயில் கட்டு அதை கொண்டாடிய ரசிகா்களை நாம் மறக்க முடியுமா?.

அதிலும் அஜித் மற்றும் விஜய்க்கு என்று பல கோடியான கோடி ரசிகா்கள் இருக்கின்றனா். தீவிர ரசிகா்களாக மாறி விடுகின்றனா். அந்த வகையில் நடிகா்களின் பிறந்த நாளின் போது ரத்ததானம் செய்வது, பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனா்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் விவேகம் படத்தில் நடித்து வருகிறாா். இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகா்வால் நடிக்கிறாா். மேலும் அக்ஷாரஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாா். இந்த படத்திற்கு அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகா்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

அஜித் மீது தீராத பற்றுக் கொண்ட ரசிகா் ஒரு சிலா் அவருக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளது. மேலும் அஜித் உருவத்தை போன்று சிலையை வடிவமைப்பது வருவது போல உள்ள புகைப்படம் ஒன்று வலைத்தளங்களில் பரவி வருவதை நெட்டிசன்கள் பாா்த்து வருகின்றனா்.