இனி கவர்ச்சி வேண்டாம்: சமந்தாவை எச்சரிக்கும் ரசிகர்கள்

12:47 மணி

Loading...

நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் சமந்தா அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதேபோல், நேற்று கவர்ச்சியான உடை அணிந்தபடியான புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் இனிமேல் இப்படி கவர்ச்சி காட்டவேண்டாம். நாகரீகமாக உடையில்தான் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். ஏற்கெனவே, இதுபோல ஒரு கவர்ச்சிப் படத்தை போட்டு சமூகவலைத்தளத்தில் சமந்தா விவாதிக்கப்பட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமந்தா நடிப்பில் தற்போது ‘மெர்சல்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

(Visited 38 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com