அதிவேக 200K லைக்ஸ்: அஜித்தின் ‘விவேகம்’ டீசர் சாதனை

11:40 காலை

தல அஜித் நடித்து வரும் விவேகம்’ படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு சரியாக 12.01 மணிக்கு வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் சுனாமியை ஏற்படுத்தி வருகிறது. மிக அதிகமான பார்வையாளர்கள் மற்றும் லைக்குகளை பெற்று வரும் இந்த டீசர், இந்திய அளவில் அதிவேகமாக 200K லைக்குகளை பெற்ற டீசர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் ஷாருக்கானின் ‘ராயிஸ்’ டீசர் 3.35 மணி நேரத்தில் 100K பார்வையாளர்களும், பாகுபலி 2 திரைப்படம் 3.1 மணி நேரத்தில் 100K லைக்குகளும், சல்மான்கானின் ‘டியூப்லைட்’, 2.30 மணி நேரத்தில் 100K லைக்குகளும் பெற்றுள்ள நிலையில் அஜித்தின் ‘விவேகம்’ டீசர் வெறும் 50 நிமிடங்களில் 100K லைக்குகளும், 2.30 மணி நேரத்தில் 200K லைக்குகளையும் பெற்று சாதனை புரிந்துள்ளது.

மேலும் ஒவ்வொரு வினாடிக்கும் 7 லைக்குகளும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு 1000 பார்வையாளர்களும் அதிகரித்து கொண்டே வருவதால் இந்த படத்தின் டீசர் இன்னும் பல சாதனைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393