மாமியாருடன் கள்ள உறவு வைத்திருந்த மருமகனை மாமனாரே கொலை செய்த விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மநிலம் கஞ்சம் என்கிற பகுதியில் வசிப்பவர் பிஜய்குமார். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு, அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் உறவு முறையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிந்து வந்தார்.

பிஜய்குமாருக்கு மருமகன் முறையில் உள்ள ஜெய் என்பவர் வேலை தேடி டெல்லி வந்துள்ளார். அவரை தனது அதே பிளாட்டில் தங்க வைத்தார் பிஜய்குமார். அப்போது, பிஜய்குமாரின் காதலிக்கும், ஜெய்க்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிஜய்க்கு தெரியாமல் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் பிஜய்குமாருக்கு தெரியவர, ஆத்திரமடைந்த அவர், ஜெய்யை அடித்து கொலை செய்து ஒரு இடத்தில் புதைத்து விட்டார். ஜெய்யை காணவில்லை என அவரின் பெற்றோர் கொடுத்த புகாரில், அவரை தீவிரமாக தேடிவந்த போலீசார் பிஜய்குமார்தான் அவரை கொலை செய்துள்ளார் என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.