ஆண் நண்பனுடன் உல்லாசமாக இருந்த தனது மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சோண்டி எனும் கிராமத்தில் வசிப்பர் பாண்டுரங் ஸ்ரீரங்க சாய்குண்டே(51). இவருக்கு 17 வயது கல்லூரி செல்லும் மகள் இருக்கிறார். அப்பெண், அதே கல்லூரியில் படிக்கும் ஆண் நண்பர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் அடிக்கடி வாலிபருடன் ஊர் சுற்றி வந்துள்ளார்.

தந்தை கண்டித்த போது அது வெறும் நட்புதான் எனக்கூறியுள்ளார். ஆனாலும், அதை நிறுத்தும்படி தந்தை கண்டித்துள்ளார். ஆனால், அதை அப்பெண் ஏற்காமல் தொடர்ந்து அந்த வாலிபருடன் செல்போனில் பேசுவது, சந்திப்பதுமாக இருந்துள்ளார்

இதை அறிந்து ஆத்திரமடைந்த சாய்குண்டே மகளென்றும் பாராமல் கழுத்தை நெறித்து கொலை செய்தார். அதன்பின் வீட்டின் அருகிலேயே சடலத்தை போட்டு எரித்துள்ளார். இதற்கு அப்பெண்ணின் 2 மாமன்களும் உதவியாக இருந்துள்ளனர். தனது மகள் காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் பொய் புகாரும் சாய்குண்டே அளித்திருந்தார்.

இந்நிலையில், இளம்பெண்ணின் பாதி உடல் வெந்த நிலையில், அவரின் இளைய மகள் இதை பார்த்துவிட்டார். அதன்பின் அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சாய்குண்டே கைது செய்யப்பட்டார். இதை கௌரவக் கொலையாகவே போலீசார் கருதுவது குறிப்பிடத்தக்கது.