abuse

கடலூரின் பெற்ற மகளை படுக்கைக்கு அழைத்தும், தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடலூரை திருமணமான பெண் ஒருவர் தனது கண்வரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சமயத்தில் சவுதியில் வேலை பார்த்து வந்த பெண்ணின் தந்தை இந்தியா திரும்பியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய தந்தை மகளை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், இதற்கு அவர் மறுத்துள்ள நிலையில், மகள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளார் தந்தை.

இதனை அறிந்துக்கொண்டு தாய் கணவனை கண்டித்த போது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் வேறு வழி இல்லாமல் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டார்.