தஞ்சாவூரில் உள்ள சாலியமங்கலத்தில் தந்தை ஒருவர் தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஓராண்டாக தனது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அளித்துள்ள புகாரில், தனது தந்தை தன்னை கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார். தந்தையின் சந்தேகப் புத்தியால் தனது தாயும் தற்கொலை செய்து கொண்டதாகவும். தாயின் மரணத்துக்கு பின்னர் தந்தை தன்னை முன்பைவிட அதிகமாக பாலியல் பாலியல் பலாத்காரம் செய்வதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரை அடுத்து, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட அந்த சிறுமியின் தந்தையை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை அந்த நபர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.