பல ஆண்டுகளாக உலா வரும் வதந்தியான செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபுவை திமுக செயல் தலைவா் ஸ்டாலின் கடத்தியாக கூறப்படுவது பற்றி பாத்திமாபாபு தற்போது விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஜெயா தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான பாத்திமா பாபு, தன்னை திமுக செயல்தலைவா் மு.க ஸ்டாலின் கடத்திக் கொண்டு செல்லவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். பல காலமாக இந்த செய்தியானது உலா வந்துக்கொண்டிருக்கிறது. இளம் வயதில் பாத்திமா பாபுவை கடத்தி கொண்டு போய் விட்டதாக திமுக செயல்தலைவா் ஸ்டாலின் மீது அதிகமாக பேசப்பட்ட ஒரு செய்தி இது. தற்போது வரை அதை திமுகவிற்கு எதிராகவும் பேசப்பட்டு வரும் செய்தியும் இதுவாக தான் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இதை வைத்து கலாய்ப்பதும் நடந்து வருகிறது. தன்னுடைய இளம் காலத்தில் இதுபற்றி பேசாத போது தற்போது தன்னுடைய மவுனத்தை கலைத்து பேசியிருக்கிறார் பாத்திமா பாபு.

ஜெயா டிவியில் பத்து வருடங்களுக்கு மேல் செய்தி வாசிப்பாளராக இருந்தவா் பாத்திமா பாபு. ஜெயலலிதாவின் கட்சியில் சேர்ந்து அவருக்காக பணிபுரிந்த வந்தார். அங்கு சென்றது கூட பாதுகாப்பு கருதிதான் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவா் இறந்த பின் அங்கிருந்து விலகி பன்னீா் செல்வம் கட்சியில் சேர்ந்தார். இதனால் ஜெயா டிவியிலிருந்து விலகினார். சின்னம்மா என்று செய்தி வாசிப்பதற்கு அவரது மனம் ஏற்றுக்கொள்ளாதும் ஒரு காரணம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் பாத்திமா பாபு திமுக செயல் தலைவா் ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டை பற்றி மவுனம் கலைத்து பேசியுள்ளார். என் வாழ்வில் அப்படியொரு நிகழ்வு நடக்கவில்லை என்றும் அவர் பெயருக்கு கெட்ட பெயர் ஏற்படும் விதமாக விமா்சிக்க வேண்டாம். ஒரு கட்சியின் தலைவரின் குணநலன்களை பற்றி குறை கூறுவது தவறு. பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு செய்தி பரவி வந்தது. ஏற்கனவே இதுபற்றி பிரபல வார இதழில் விளக்கம் அளித்துள்ளேன். ஆனால் அது குறித்து எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. செய்தி வாசிப்பாளராக சில காலம் அந்த பணியை முழுமையாக செய்ய இயலவில்லை. அதனால் என்னை தினமும் பார்க்க முடியாத காரணத்தால் பரப்பி விட்டப்பட்ட வதந்தி என நினைக்கிறேன்.

எனவே ஒரு கட்சியின் தலைவரை பற்றி சமூக வலைத்தளங்களில் விமா்ச்சிக்க வேண்டாம். அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

திமுக நிர்வாகி கரூரில் சக பெண் நிர்வாகியின் இடுப்பை கிள்ளிய செய்தி வந்திலிருந்து சமூக வலைத்தளங்களில் பாத்திமா பாபு மற்றும் ஸ்டாலின் தொடர்பான மீம்ஸ்கள் அதிகமாக வெளியாகின. இதனால் மிகவும் மன அதிருப்பதியில் இருந்த பாத்திமாபாபு இது பற்றி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  சினிமாவில் இருந்து விலகுவது உண்மைதானா? கமல் விளக்கம்