குட்டப்பாவாடை அணிந்து காதல் காட்சிகளில் நடிக்க வெட்கமாக இருக்கிறது – காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தற்போது அஜித் குமார் ஜோடியாக விவேகம் படத்திலும் ராணா ஜோடியாக நீனே ராஜா நானே மந்திரி என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

படப்பிடிப்பு குழுவினர் சுற்றி நிற்கும் போது குட்டைப்பாவாடை அணிந்து காதல் மற்றும் முத்த காட்சிகளில் நடிப்பதற்கு வெட்கமாக இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

இதை பற்றி காஜல் அகர்வால் கூறுகையில், காதல் மற்றும் முத்த காட்சிளில் ரசிகர்கள் திரையரங்குகளில் சாதாரணமாக பார்த்து விட்டு செல்கின்றனர். ஆனால் ஷூட்டிங்கில் ஆயிரம் பேர் மத்தியில் குட்டை பாவாடை அணிந்து ஹீரோவிடம் நெருக்கமான  காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் வெட்கமாக இருக்கிறது.

“இது போன்ற காட்சிகளில் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது நடிகைகளுக்கு மட்டும் தான் தெரியும். இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்” என கூறியுள்ளார்.